Skip to main content

5 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை நோக்கி- டிஜிட்டல் ஏற்றுமதி மூலோபாய வீதி வரைபடம் தொழில்துறை துறையுடன் மீளாய்வு செய்யப்பட்டது

MoT Editor

இலங்கையில் வின் டிஜிட்டல் தொழில்துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்தி, 2030 ஆம் ஆண்டளவில் டிஜிட்டல் ஏற்றுமதி வருவாயை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள மூலோபாய வீதி வரைபடத்தை (Strategic Roadmap) மீளாய்வு செய்தல், உறுதிப்படுத்துதல் மற்றும் அதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினரின் உடன்பாட்டை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட “The Road to US$5 Billion” தேசிய பயிலரங்கு ஜூலை 31 அன்று கொழும்பு Cinnamon Life விடுதி வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் GovTech Sri Lanka ஆகியவற்றினால், உலக வங்கி குழுமத்தின் தொழில்நுட்ப உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பயிலரங்கில் டிஜிட்டல் தொழில்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பங்காளிகள் பலர் கலந்துகொண்டனர். பயிலரங்கின் ஆரம்ப உரைகளை டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ எரங்க வீரரத்ன, GovTech Sri Lanka தலைவர் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய மற்றும் உலக வங்கி குழுமத்தின் IFC பிரதான துறை அதிகாரி விக்டர் அந்தோனிப்பிள்ளை ஆகியோர் ஆற்றியதுடன், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க மற்றும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால உட்பட அரச மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உலக வங்கி குழுமத்தின் தொழில்நுட்ப உதவியின் கீழ், KPMG நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆலோசகர்களால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் துறை பற்றிய மதிப்பீட்டு அறிக்கை மற்றும் முன்மொழியப்பட்ட மூலோபாய வீதி வரைபடம் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, GovTech Sri Lanka மற்றும் தொழில்துறை மேம்பாட்டுக் குழுவின் பங்களிப்புடன் பல கட்டங்களில் மீளாய்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஆவணங்கள் குறித்து தொழில்துறையினரின் பரந்த கருத்துக்களைப் பெறுவது பயிலரங்கின் முக்கிய நோக்கமாகும்.

மனித வளங்கள் மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற திறன்களை மேம்படுத்துதல், கண்டுபிடிப்புகள் மற்றும் சுயாதீன தொழில்முறையாளர்களை (Freelancers) வலுப்படுத்துதல், உலகளாவிய சந்தைப் பிரவேசம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி, அத்துடன் நிலையான வளர்ச்சிக்குத் தேவையான கொள்கைகள், முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய முக்கிய துறைகளை உள்ளடக்கிய பல கருப்பொருள் குழு விவாத அமர்வுகள் நடத்தப்பட்டன. அங்கு அறிக்கையில் உள்ள முடிவுகள் மற்றும் முன்மொழிவுகளை மீளாய்வு செய்வதற்கு மேலதிகமாக, அடையாளம் காணப்படாத இடைவெளிகள், புதிய முன்மொழிவுகள், அமலாக்க முன்னுரிமைகள், நிறுவனப் பொறுப்புகள், வெற்றியளவீட்டு குறிகாட்டிகள் மற்றும் ஒவ்வொரு தரப்பினரும் வழங்கக்கூடிய நடைமுறைப் பங்களிப்புகள் குறித்தும் பரந்த அளவில் விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக இலங்கையின் டிஜிட்டல் தொழில்துறையை உலகளவில் எவ்வாறு நிலைநிறுத்துவது, செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக தொழில்துறையின் வணிக மாதிரிகள் மற்றும் வேலைப் பாத்திரங்கள் எவ்வாறு மாறுகின்றன, டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் அறிவுசார் சொத்துக்களின் அடிப்படையிலான உயர் மதிப்புமிக்க ஏற்றுமதிகளை அதிகரித்தல் மற்றும் உள்நாட்டு கண்டுபிடிப்புகளை உலகளாவிய அளவுக்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இந்த மூலோபாய வீதி வரைபடத்தின் மூலம் இலங்கையின் டிட்டல் தொழில்துறையின் சர்வதேச போட்டித்தன்மையை உயர்த்துதல், தரமான வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகளை உருவாக்குதல், உள்நாட்டு டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உலகளாவிய சந்தைக்குக் கொண்டு செல்லுதல் மற்றும் பிராந்தியத்தில் முன்னணி டிஜிட்டல் பொருளாதாரமாக இலங்கையை நிலைநிறுத்துவதற்கான சான்றுகள் சார்ந்த செயல்பாட்டு கட்டமைப்பை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

பயிலரங்கில் தொழில்துறை நிபுணர்கள் மற்றும் ஏனைய தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை உள்ளடக்கி வீதி வரைபடம் மேலும் மேம்படுத்தப்படவுள்ளது. அதில் முன்னுரிமை நடவடிக்கைகள், பொறுப்புள்ள நிறுவனங்கள், அமலாக்க காலக்கெடு மற்றும் முன்னேற்றத்தை அளவிடும் குறிகாட்டிகள் தெளிவாக அடையாளம் காணப்பட்ட, நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தைத் தயாரிப்பதே எதிர்பார்ப்பாகும்.

இந்த தேசிய பயிலரங்கில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறையின் முன்னணி நிறுவனங்கள், தொழில்துறை மற்றும் தொழில்முறை சங்கங்கள், வினோதமான தொழில்முனைவோர்கள் (Innovative Entrepreneurs), ஆரம்பக்கட்ட வணிகங்கள் (Startups), முதலீட்டாளர்கள், சுயாதீன தொழில்முறையாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், வெளிநாட்டிலுள்ள இலங்கை தொழில்முறையாளர்கள் மற்றும் சர்வதேச அபிவிருத்தி பங்காளிகள் பலர் கலந்துகொண்டனர்.

image 01image 02image 03image 05image 04image 06