Skip to main content

சர்வதேச 'சக்திசாட்' அமைப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த இலங்கைப் புதல்விக்கு அரிய வாய்ப்பு.

MoT Editor

STEM கல்வித் திட்டத்தில் பங்கேற்கும் 200 இலங்கை மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டித் தேர்வுச் செயன்முறையைத் தொடர்ந்து, மதிப்புமிக்க 'சக்திசாட்' (ShaktiSAT) சர்வதேச விண்வெளித் திட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக 18 வயதான மாணவி செனிசா குணவர்தன தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் 2026 ஆகஸ்ட் 22 முதல் 31 வரை இந்தியாவின் கெளதம புத்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளதுடன், முழுமையான விஜயமானது 2026 ஆகஸ்ட் 21 முதல் 31 வரை புதுடெல்லியை மையமாகக் கொண்டு அமையவுள்ளது. இவ்விஜயத்தின் போது, அவர் இந்தியப் பிரதமர் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆகியோருடான உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார். இது இலங்கை இளைஞர்களுக்குக் கிடைத்துள்ள மிக முக்கிய கல்வி மற்றும் இராஜதந்திர வாய்ப்புகளில் ஒன்றாகும்.

இந்த வெற்றியினைப் பாராட்டுவதற்கும், அவரது வரவிருக்கும் பயணம் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்குமாக, செனிசா குணவர்தன அண்மையில் (27) டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கெளரவ எரங்க வீரரத்ன அவர்களைச் சந்தித்தார். இதன்போது, அவர் தனது அனுபவங்களைப் பிரதி அமைச்சருடன் பகிர்ந்து கொண்டதுடன், நாட்டின் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப எதிர்காலத்திற்கு இத்தகைய இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், அவரது எதிர்காலப் பயணத்திற்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

image 01image 02image 03image 05image 04image 06