Skip to main content

MoT Editor

STEM கல்வித் திட்டத்தில் பங்கேற்கும் 200 இலங்கை மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டித் தேர்வுச் செயன்முறையைத் தொடர்ந்து, மதிப்புமிக்க 'சக்திசாட்' (ShaktiSAT) சர்வதேச விண்வெளித் திட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக 18 வயதான மாணவி செனிசா குணவர்தன தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் 2026 ஆகஸ்ட் 22 முதல் 31 வரை இந்தியாவின் கெளதம புத்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளதுடன், முழுமையான விஜயமானது 2026 ஆகஸ்ட் 21 முதல் 31 வரை புதுடெல்லியை மையமாகக் கொண்டு அமையவுள்ளது. இவ்விஜயத்தின் போது, அவர் இந்தியப் பிரதமர் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆகியோருடான உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார். இது இலங்கை இளைஞர்களுக்குக் கிடைத்துள்ள மிக முக்கிய கல்வி மற்றும் இராஜதந்திர வாய்ப்புகளில் ஒன்றாகும்.

இந்த வெற்றியினைப் பாராட்டுவதற்கும், அவரது வரவிருக்கும் பயணம் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்குமாக, செனிசா குணவர்தன அண்மையில் (27) டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கெளரவ எரங்க வீரரத்ன அவர்களைச் சந்தித்தார். இதன்போது, அவர் தனது அனுபவங்களைப் பிரதி அமைச்சருடன் பகிர்ந்து கொண்டதுடன், நாட்டின் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப எதிர்காலத்திற்கு இத்தகைய இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், அவரது எதிர்காலப் பயணத்திற்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

image 01image 02image 03image 05image 04image 06

MoT Editor

அரச சேவையில் "நேர்மையான கலாச்சாரம் மற்றும் தூய்மையான இலங்கை" (Clean Sri Lanka) தேசிய திட்டத்திற்கு தீவிர பங்களிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஊழியர்கள், அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால அவர்களின் தலைமையில் நேர்மையான அரச சேவைக்கான உறுதிமொழியை ஏற்கும் நிகழ்வு இன்று (27) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.

தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கருப்பொருளான "வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற இலக்கை அடையும் நோக்கில், ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் உள்ள அரச நிறுவனங்களை உள்ளடக்கிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பிரசார வாரத்திற்கு இணையாக இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சின் செயலாளர், டிஜிட்டல் ஆளுகையை (Digital Governance) நோக்கிய பயணத்தில் அதிகாரிகளின் மனப்பான்மை மற்றும் நடத்தை மாற்றங்கள் மிகவும் முக்கியம் என்றும், நேர்மையையும் தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைத்து மக்களுக்கு திறமையான மற்றும் நம்பிக்கையான சேவையை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டார்.

மேலும், ஒட்டுமொத்த அரச சேவையையும் டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் உயர் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் அதிகபட்ச திறமையைக் கொண்ட மக்கள் நலன்சார் அரச சேவையை கட்டியெழுப்புவதற்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

image 01image 03image 05image 04image 06

MoT Editor

இலங்கையின் தேசிய பாடசாலைக் கல்வி முறைமையை டிஜிட்டல் மயமாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கும், அதனுடன் தொடர்புடைய அடுத்தகட்ட மூலோபாய நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்குமான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜூலை 21 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் திரு. வருண ஸ்ரீ தனபால மற்றும் அரசின் பல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

டிஜிட்டல் பணிக்குழு (Digital Task Force), பிரதமர் அலுவலகம், கல்வி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, GovTech நிறுவனம், இலங்கை விமானப்படை ஆகியவற்றின் பிரதிநிதிகளும், ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) மற்றும் டயலொக் (Dialog Axiata) நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்கெடுத்தனர். அரச மற்றும் தனியார் துறையினருக்கு இடையிலான திறம்பட ஒருங்கிணைப்பின் மூலம் கல்வி தொடர்பான தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஃபைபர் (Fibre) தொழில்நுட்பத்தின் ஊடாக அதிவேக இணைய இணைப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. மேலும், புவியியல் அல்லது தொழில்நுட்ப தடைகள் காரணமாக ஃபைபர் வசதிகளை வழங்க முடியாத பாடசாலைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு மாற்று இணைய இணைப்பு தீர்வுகளை (Alternative Connectivity Solutions) வழங்குவது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், நாட்டின் 6,000 க்கும் மேற்பட்ட இரண்டாம் நிலை பாடசாலைகளை தேசிய டிஜிட்டல் அமைப்புகள் மற்றும் கற்றல் தளங்களுடன் இணையம் ஊடாக இணைக்கும் பாடசாலை இணையத் திட்டத்தை (School Internet Project) விரைவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

கல்வித் துறையின் டிஜிட்டல் மாற்றத்தை வலுப்படுத்தும் வகையில், பாடசாலைகளுக்கான தொலைநிலைக் கற்றல் மேலாண்மை அமைப்புகளை (DLMS) நிறுவுதல் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை (Smart Classroom) வசதிகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. கல்வித் தரவு மேலாண்மையை முறைப்படுத்துவதற்காக தேசிய கல்வி மேலாண்மை தகவல் அமைப்பை (NEMIS) மேம்படுத்துவதுடன், தேசிய கற்றல் இணையதளமான 'ஈ-தக்சலாவ' (e-Thaksalawa) அமைப்பை நவீன தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப புதுப்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்த அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் மிகவும் திறம்பட செயல்படுத்துவதற்காக கல்வி அமைச்சுக்கும் GovTech நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கையெழுத்திடுவதற்கும் உடன்பாடு எட்டப்பட்டது.

கல்விக்கான டிஜிட்டல் அணுகலை விரிவுபடுத்துவதற்கு இணையான வகையில், குழந்தைகளின் இணையவழி பாதுகாப்பை (Online Child Safety) உறுதி செய்வதன் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, தற்போதைய சமூக சவாலாக உருவெடுத்துள்ள இணையவழி சூதாட்டத்திற்கு அடிமையாதல் (Online Gambling Addiction) மற்றும் அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மாணவர்களையும் சமூகத்தையும் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட்டது.

image 01image 02image 03image 05image 04image 06

MoT Editor

The Ministry of Digital Economy, through its ICT Division, successfully conducted a comprehensive user training programme aimed at strengthening the digital capabilities of public sector staff by providing practical knowledge and hands-on experience with the Ministry's digital government platforms. Special thanks to the Secretary, Ministry of Digital Economy Mr. Waruna Sri Dhanapala along with the Additional Secretary (Administration) and Director General (Planning) for the continuous encouragement and support provided.

The training focused on the Document Management System (Live), where participants were guided through the complete end-to-end document workflow, including document creation, submission, review, approval, and secure management of official records. Special emphasis was placed on the proper use of legally recognized digital signatures for official and confidential documents, together with the procedures for verifying digital signatures to ensure the authenticity, integrity, and security of electronic documents.

The programme also introduced two innovative digital platforms currently in the testing phase, both developed by the ICT Division of the Ministry of Digital Economy. The Digital Workplace platform is designed to provide government officers with secure access to official files anytime and from anywhere, while offering AI-powered document creation, intelligent formatting, and integrated project management capabilities to enhance collaboration and operational efficiency across the public sector.

Participants were also introduced to the Digital Nomad Visa Recommendation System, a digital solution developed to automate the traditional Nomad visa application submission and recommendation process. The platform is expected to streamline manual workflows, improve processing efficiency, and deliver a more transparent and citizen-centric service.

The training programme reflects the Ministry's continued commitment to strengthening digital skills across the public sector while accelerating the adoption of secure, innovative, and technology-driven government services. The Ministry of Digital Economy extends its sincere appreciation to Authnex and LankaPay for their valuable partnership in delivering the Digital Signature solution, and to the Prime Minister's Office for its collaboration and support in the development and implementation of the Document Management System.

These strategic partnerships continue to play a vital role in advancing Sri Lanka's digital transformation agenda through secure, efficient, and future-ready digital public services. Through initiatives of this nature, the Ministry remains committed to empowering public officers with the knowledge, skills, and digital tools required to deliver efficient, transparent, and citizen-centric government services while accelerating Sri Lanka's journey towards a digitally empowered nation.

image 01image 02image 03

MoT Editor

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் 2026 உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டிற்கு (WAIC) இணையாக நடைபெற்ற இராஜதந்திர மட்டத்திலான மாநாட்டில் உரையாற்றிய இலங்கை டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்கா வீரரத்ன அவர்கள் சிறப்புரை ஆற்றினார். "பிரகாசமான எதிர்காலத்திற்கான AI கூட்டாண்மை" (AI Partnership for a Brighter Future) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த மாநாட்டில், உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளின் டிஜிட்டல் அமைச்சர்கள் மற்றும் இத்துறை சார்ந்த முன்னணி வல்லுநர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். இதில் உரையாற்றிய பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், தங்கள் நாடுகளில் தற்போதுள்ள டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்தும், சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தினர்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது ஏற்கனவே உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களின் பொதுச் சேவைகளையும் பொருளாதாரங்களையும் தீர்மானித்து வருவதால், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு ஆளுகை கட்டமைப்பை உருவாக்கும் போது வளரும் நாடுகளின் குரலுக்கு சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பிரதி அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். இன்று நம் முன்னால் உள்ள உண்மையான கேள்வி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமூகத்தை மாற்றுமா என்பது அல்ல, மாறாக அந்த மாற்றத்தின் பலன்கள் அனைவருக்கும் நியாயமான முறையில் சென்றடைகிறதா அல்லது அது சட்டங்களை உருவாக்கும் நாடுகளுக்கும் அந்த சட்டங்களுக்கு உட்பட்டு வாழும் நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் விரிவுபடுத்துகிறதா என்பதே ஆகும் என அவர் சுட்டிக்காட்டினார்

இதற்கான இலங்கையின் பதில் மிகவும் எளிமையானது என்றும், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு ஆளுகையானது வளரும் நாடுகளை (Global South) இந்த மேசையைச் சுற்றி அமர வைத்து உருவாக்கப்பட வேண்டுமே தவிர, முடிவுகளை எடுத்த பின்னர் அவர்களுக்குத் தெரிவிப்பதாக இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பது அதன் ஆளுகைச் சட்டங்களை கூட்டுப் பொறுப்புடன் இணைந்து எழுதுவதன் மூலம் மட்டுமே ஒரு உண்மையான கூட்டாண்மையாக மாற முடியும் எனக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், பொறுப்பான செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்காக இலங்கை கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் DIGIECON 2030 தேசிய டிஜிட்டல் பொருளாதார திட்டத்தின் ஊடாக வலுவான டிஜிட்டல் அடித்தளத்தையும், இறையாண்மைமிக்க டிஜிட்டல் உள்கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு சேவைகளுக்கான அடிப்படையான இலங்கை தனித்துவமான டிஜிட்டல் அடையாள (SLUDI) தளம் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது என்றும், விரைவில் நிறுவப்படவுள்ள தேசிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் (National AI Institute) ஊடாக செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி, நெறிமுறைகள் மற்றும் கொள்கைகள் குறித்த உள்நாட்டு திறன்கள் மேம்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். உலகளாவிய செயற்கை நுண்ணறிவு ஆளுகை முயற்சிக்கான இலங்கையின் அணுகுமுறையை வழிநடத்தும் ஒரு முக்கிய கொள்கையாக, உலகளாவிய ரீதியில் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுடன் இணையும் அதே வேளையில், நாடுகள் தங்களது சொந்த தரவு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை ஆளுகை செய்யும் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

இது தவிர, செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு குறித்த உலகளாவிய விதிகள் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால், வளரும் நாடுகளுக்கு அவற்றை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப திறன்கள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அத்துடன் எந்தவொரு செயற்கை நுண்ணறிவு அமைப்பினதும் இறுதி வெற்றியானது, அதன் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் மட்டும் அளவிடப்படக் கூடாது என்றும், அது சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு உயர்த்துகிறது என்பதைக் கொண்டே அளவிடப்பட வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். இந்நிகழ்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க அவர்களுடன் பிராந்திய நாடுகளின் இராஜதந்திர பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

image 01image 02image 03image 05image 04image 06

MoT Editor

தற்போது 5% மட்டத்தில் உள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் ஆண்டுகளில் 7%-8% மட்டத்திற்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், அந்தப் பயணத்தில் தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளின் விரிவான பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளில் முன்னிலை வகிக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினருடன் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உள்நாட்டு தொழில்துறையினரை வலுப்படுத்துவதன் மூலமே நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும் என இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டிலுள்ள சாத்தியக் கூறுககளை அடையாளங் கண்டு அவற்றை வெற்றிகொள்ள அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு அனைத்து தொழில்முனைவோருக்கும் அழைப்பு விடுத்தார். இப்பணியை வெற்றிகொள்வதற்கான தமது முன்மொழிவுகள் மற்றும் இத்துறையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பான அறிக்கையொன்றை கூடிய விரைவில் சமர்ப்பிக்குமாறும் ஜனாபதி கோரிக்கை விடுத்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காக அடுத்த ஆண்டில் மூலதனச் செலவாக 2 டிரில்லியன் ரூபாவை ஒதுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் ஏற்படும் டொலர் தேவையை ஈடுசெய்ய ஏற்றுமதித் துறையின் அதிகபட்ச பங்களிப்பை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

டொலர் வருமானத்தை அதிகரிப்பதற்காக தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளில் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய விரிவான பங்களிப்பு குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

தற்போது இலங்கையின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி வருமானத் துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் வருடத்திற்கு 05 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டும் சாத்தியம் காணப்படுவதாகவும், தற்போது சுமார் 500 மில்லியன் டொலர்களாக உள்ள மின் மற்றும் இலத்திரனியல் துறையின் ஏற்றுமதி வருமானத்தை 2 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளில் இலங்கையை ஒரு உலகளாவிய வர்த்தகநாமமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இந்த இரண்டு துறைகளுக்கும் தொடர்பான உயர்தர தொழிலாளர் படை இலங்கையில் உள்ளதால், அவர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இத்துறைகளுக்கு தொடர்பான தொழில்நுட்ப பாகங்களை இறக்குமதி செய்வதில் உள்ள சிக்கல்கள், துறைமுக நகரத்தை அண்டிய நிறுவனங்கள் வங்கி முறைமையுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதில் உள்ள தடைகள், உள்நாட்டு வர்த்தகர்களின் உற்பத்திகளை உள்நாட்டு சந்தையில் ஊக்குவிப்பதில் எழுந்துள்ள பிரச்சினைகள் உட்பட இத்துறையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது முகங்கொடுக்கும் சவால்கள் குறித்து இதன் போது வர்த்தகர்கள் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியதுடன், அத்தடைகளை நீக்குவது உள்ளிட்ட மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட திருத்தங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

கைத்தொழில்துறையினரின் பிரச்சினைகள் மற்றும் முன்மொழிவுகளை நேரடியாக பெற்றுக்கொள்வதற்கும் அவற்றிற்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இத்துறைகளில் வசதிகளை விரிவுபடுத்துவதற்காக அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் இங்கு வர்த்தகர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இதற்கிடையில், மெய்நிகர் விசேட பொருளாதார வலயம் (Virtual Special Economic Zone) மற்றும் தரவு மையத்தை ஸ்தாபிப்பதற்கான திட்டங்கள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R&D) நடவடிக்கைகளுக்கு தேவையான இலத்திரனியல் உபகரணங்களை இறக்குமதி செய்வதில் உள்ள சுங்கத் தடைகளை நீக்குவதற்கு ''Green Channel'' போன்ற முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள், Cloud மற்றும் SaaS (Software as a Service) போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு வெளிநாட்டு கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது உள்ள கடன் அட்டை கட்டுப்பாடுகள் மற்றும் வங்கி முறைமையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு விளக்கிய டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, இத்துறையின் வல்லுநர்கள் வெளிநாடு செல்வதை தடுப்பதற்கு மாற்று நிவாரணங்களை வழங்குவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ,நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க ஆகியோரும், இலங்கை மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்கள் சங்கத்தின் (SLASSCOM) ஷெஹானி செனவிரத்ன உட்பட அத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் தொழில்முனைவோர்களும், இலங்கை இலத்திரனியல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (SLEMEA) தலைவர் காமினி ரணசிங்க, முன்னாள் தலைவர் கலாநிதி அஜித் பெஸ்குவல், VARIOSYSTEMS PVT LTD முகாமைத்துவ பணிப்பாளர் தேவன் சதீஸ்வரன், GPV Lanka முகாமைத்துவ பணிப்பாளர் சந்தன திசாநாயக்க உள்ளிட்ட அத்துறையின் பல முக்கிய வர்த்தகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

image 01image 02image 03image 05image 04image 06

MoT Editor

டிஜிட்டல் பொருளாதார கௌரவ பிரதி அமைச்சர், மொபைல் தகவல் தொடர்பு சங்கத்தின் (GSMA) சிரேஷ்ட அதிகாரிகளுடன் ஜூன் 25 ஆம் திகதி நடைபெற்ற MWC GSMA வட்டமேசை மாநாட்டின் பக்கவகையில் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியதுடன், இலங்கையின் விදුலிசமிக்ஞை மற்றும் டிஜிட்டல் நிகழ்ச்சி நிரலை மேம்படுத்துவது குறித்த ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இந்த தூதுக்குழுவில் டிஜிட்டல் பொருளாதார கௌரவ பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் இலங்கை விදුலிசமிக்ஞை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) பணிப்பாளர் நாயகம் திரு. பந்துல ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டதுடன், GSMA அமைப்பின் சார்பில் பொதுக் கொள்கை மற்றும் பொது விவகாரத் தலைவர் (APAC) திருமதி ஜெனட் வைட், கொள்கை பணிப்பாளர் (APAC) திரு. பென்சன் கோ மற்றும் அலைக்கற்றை மற்றும் கொள்கை பணிப்பாளர் (தெற்காசியா) திரு. ஆஷிஷ் கார்க் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் 5G வெளியீட்டு உத்தி, 5G சேவைப் பயன்பாட்டு வழிமுறைகளைக் கண்டறிதல், ஒருங்கிணைந்த உரிமம், தொழில்நுட்ப நடுநிலைமை, உள்கட்டமைப்புப் பகிர்வு மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவற்றில் இக்கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின. இந்த சந்திப்பில் டிஜிட்டல் சுவிட்ச்ஓவர் மற்றும் உலக வானொலித்தொடர்பு மாநாடு 2027 (WRC-27) க்கான தயாரிப்புகள் குறித்து TRCSL உடன் சமீபத்திய ஈடுபாடுகள், அத்துடன் GSMA APAC குறுக்கு துறை மோசடி எதிர்ப்பு பணிக்குழு (ACAST) பற்றிய புதுப்பிப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் டிஜிட்டல் உருமாற்ற அபிலாஷைகள் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பரந்த முன்னுரிமைகளுக்கு ஆதரவாக தொடர்ச்சியான ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான தங்களின் அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

image 01image 02image 03image 05image 04image 06

MoT Editor

டிஜிட்டல் சேவைகள் மீதான நம்பிக்கையைப் பாதுகாத்தல் மற்றும் ஆசிய-பசிபிக் (APAC) பிராந்தியத்தில் அதிகரித்து வரும் நிதி மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு (Scams and Fraud) தீர்வுகளைக் காண்பதை நோக்கமாகக் கொண்ட விசேட இராஜதந்திர கலந்துரையாடல் ஒன்று 2026 ஜூன் 25 அன்று சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள கெரி ஹோட்டல் (Kerry Hotel) வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. GSMA அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடல், "MWC Shanghai 2026" சர்வதேச மாநாட்டுக்கு இணையாக, அழைக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட ஒரு மூடிய அமர்வாக (Closed-door) நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ எரங்க வீரரத்ன அவர்கள் கலந்துகொண்டதுடன், பிராந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதில் இலங்கையின் தீவிர பங்களிப்பு அங்கு சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டது.

ஆசிய-பசிபிக் மற்றும் ஆசிய (ASEAN) பிராந்திய நாடுகளின் நுகர்வோர் பாதுகாப்பு, டிஜிட்டல் சேவைகள் மற்றும் பொருளாதார மீளெழுச்சித் திறனைப் பாதிக்கும் எல்லை கடந்த (Cross-border) மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக கொள்கை வகுப்பாளர்களும் ஒழுங்குபடுத்துபவர்களும் எவ்வாறு கூட்டாகச் செயற்பட வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, மோசடிக்காரர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தானியங்கிமயமாக்கல் (Automation) ஆகியவற்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் நவீன அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், அதற்குப் பொருத்தமான டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கொள்கை ரீதியான கருவிகளை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதன் இரண்டாவது கலந்துரையாடல் சுற்று "Building a Secure and Resilient Digital Future: AI, Automation and the Next Frontier of Anti-Scam Defence" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்த இலங்கை பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழு வல்லுநர்கள், மோசடி எதிர்ப்புத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல், இதற்காக தனியார் துறையின் முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் அபாயங்களை மேலாண்மை செய்து அதன் நன்மைகளை அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனச் சுட்டிக்காட்டினர். மேலும், நாடுகளுக்கு இடையே உள்ள சட்ட அதிகாரங்கள் மற்றும் அமலாக்க மாதிரிகள் ஒன்றுக்கொன்று வேறுபட்ட போதிலும், பொதுவான கோட்பாடுகள் மற்றும் நடைமுறை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் இந்த அமர்வில் வலியுறுத்தப்பட்டது.

GSMA அமைப்பின் ஆசிய-பசிபிக் பிராந்திய பொதுக் கொள்கை மற்றும் பொது விவகாரத் தலைவர் திருமதி ஜெனட் வைட் (Jeanette Whyte) அவர்களின் வரவேற்பு உரையுடன் ஆரம்பமான இக்கலந்துரையாடலில், இலங்கை විදුலிசமிக்ஞை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் (ஓய்வுபெற்ற) அவர்கள், பிராந்திய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி தாய்லாந்தின் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சமூக அமைச்சர் கௌரவ சாய்ச்சனோக் சித்சோப் (Chaichanok Chidchob) அவர்கள், மாலைதீவு தகவல் தொடர்பு அதிகாரசபையின் தலைமை நிர்வாக அதிகாரி இல்யாஸ் அகமது (Ilyas Ahmed) அவர்கள், மலேசிய தகவல் தொடர்பு அமைச்சின் பிரதி பொதுச்செயலாளர் மனோ வீரபத்திரன் (Mano Verabathran) அவர்கள் மற்றும் சீன சைபர் பாதுகாப்பு சங்கத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் லு வெய் (LU Wei) அவர்கள் உட்பட இராஜதந்திரிகளும் அழைக்கப்பட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

image 01image 02image 03image 05image 04image 06

MoT Editor

இலங்கையின் பொது மற்றும் நிதித் துறைகளின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்காக, புதுமையான கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing) தீர்வுகளை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட "GROUNDED: Local Data Sovereignty Cloud Summit" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு அண்மையில் (ஜூன் 17) கொழும்பில் உள்ள கோர்ட்யார்ட் பை மேரியட் (Courtyard by Marriott) ஹோட்டலில் நிறைவடைந்தது.

இந்நிகழ்வு NCINGA மற்றும் அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முதன்மை உரையாற்றிய டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான கௌரவ பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, 2030 தேசிய பொருளாதார கட்டமைப்பின் இலக்குகளை அடைவதற்கு டிஜிட்டல் உள்கட்டமைப்பு தேசிய பொருளாதாரத்தின் முதன்மை உந்துசக்தியாக மாற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கான பல முக்கிய உத்திகளை கோடிட்டுக் காட்டிய பிரதி அமைச்சர், இலங்கைக்குள் உள்நாட்டிலேயே அமைந்த "ஹைப்ரிட் கிளவுட்" (Hybrid Cloud) அமைப்புகளை நிறுவ வேண்டியதன் அவசியத்தை வலுவாக எடுத்துரைத்தார். இந்த அணுகுமுறையானது உணர்திறன் மிக்க அரசாங்க மற்றும் நிதித் தரவுகளின் மீது அதிகபட்ச பாதுகாப்பையும் முழுமையான தேசிய இறையாண்மையையும் உறுதி செய்கிறது என்று அவர் குறிப்பிட்டார். மேலும், வேகமான, அதிபதுகாப்பான, குடிமக்களை மையமாகக் கொண்ட பொதுச் சேவைகளை வழங்குவதற்காக, உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட "Sovereign AI" மற்றும் "NCINGA AI Factory" போன்ற உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளை உருவாக்குவதன் சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்த மாநாட்டில் வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டது.

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், முறைசாரா பொருளாதார வழித்தடங்களை ஒழுங்கமைக்கப்பட்ட பாதைகளாக மாற்றவும், மற்றும் விரிவான நிதிச் சேர்க்கையை வளர்க்கவும், அரசாங்கம் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை (National Digital ID) மற்றும் நிகழ்நேர கட்டண அமைப்புகள் (Real-Time Payment systems) உள்ளிட்ட அடிப்படை டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை விரைவாக நிலைநிறுத்த வேண்டும் என்று பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார். இந்த பாரிய மாற்றத்தை அரசாங்கத்தால் தனித்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதை ஒப்புக்கொண்ட அவர், AWS மற்றும் NCINGA போன்ற உலகளாவிய மற்றும் உள்ளூர் தொழில்நுட்பத் தலைவர்கள் ஆற்றிவரும் தீவிர பங்களிப்பைப் பெரிதும் பாராட்டினார். தனியார் துறை என்பது வெறும் பொருட்களை வழங்கும் ஒரு விற்பனையாளர் மட்டுமல்ல, இந்த தேசிய தொலைநோக்குப் பார்வையை அடைவதில் ஒரு உண்மையான மூலோபாய பங்காளியாகும் என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

தனது உரையின் நிறைவாக, இந்த நவீன தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்புகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing), சைபர் பாதுகாப்பு (Cybersecurity), தரவு அறிவியல் (Data Science) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட அதிவேக வளர்ச்சியைக் கொண்ட வளர்ந்து வரும் துறைகளில் மேம்பட்ட திறன்களுடன் இலங்கை இளைஞர்களை ஆயத்தப்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த உள்ளூர் திறமையாளர்களை வளர்ப்பதற்கு அமைச்சகம் முற்றிலும் கடமைப்பட்டுள்ளது என்பதை பிரதி அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இம்மாநாட்டில் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய மற்றும் இந்தியா மற்றும் இலங்கைக்கான AWS பொதுத்துறைத் தலைவர் திரு. மயங்க் அரோரா உள்ளிட்ட பொது மற்றும் தனியார் துறைகளின் உயர்மட்ட நிர்வாகிகள், நிதித்துறை தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் எனப் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

image 01image 02image 03image 05image 04image 06

MoT Editor

பிராந்திய மற்றும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) போட்டித்தன்மை வாய்ந்த சூழலில், இலங்கை ஒரு செயலற்ற பார்வையாளராக இருப்பதிலிருந்து மாறி, ஒரு தீவிரமான தலைவராக உருவெடுக்க வேண்டும் என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கௌரவ பிரதி அமைச்சர், பொறியியலாளர் எரங்க வீரரத்ன வலியுறுத்தினார். லங்கா கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பினால் (LEARN) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "தேசிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்" உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார். இந்த உயர்மட்ட மாநாட்டில் உயர்கல்வித் துறையைச் சேர்ந்த முக்கிய கல்வியாளர்கள், தொழில்நுட்பத் துறைத் தலைவர்கள் மற்றும் சர்வதேச பங்காள அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பிரதி அமைச்சர் தனது உரையில், செயற்கை நுண்ணறிவு என்பது இனி ஆராய்ச்சி ஆய்வகங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு விடயம் அல்ல என்றும்; அது உலகப் பொருளாதாரம், பொதுச் சேவைகள் மற்றும் புவிசார் அரசியல் மூலோபாயப் போட்டித்தன்மை ஆகியவற்றின் மைய அச்சாக பரிணமித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். ஸ்டான்போர்ட் ஏஐ குறியீடு (Stanford AI Index) மற்றும் உலக வங்கி அபிவிருத்தி அறிக்கைகளின் (World Bank Development Reports) முக்கிய குறிகாட்டிகளை மேற்கோள் காட்டிய அவர், செயற்கை நுண்ணறிவானது வளரும் நாடுகளுக்கு பாரம்பரிய அபிவிருத்தி சவால்களை முறியடித்து முன்னேறுவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் அதே வேளையில், சரியான நேரத்தில் மூலோபாய தலையீடுகளை செயல்படுத்தத் தவறினால், அது பணக்கார நாடுகளுக்கும் ஏனைய உலக நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.

உலகளாவிய அளவுகோல்களைப் பற்றி விரிவாக விளக்கிய பிரதி அமைச்சர், சிங்கப்பூர், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் அவற்றின் செயலூக்கமான மூலோபாய முடிவுகள் மற்றும் நீடித்த தேசிய அர்ப்பணிப்பு காரணமாக செயற்கை நுண்ணறிவுத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளன என்பதை எடுத்துரைத்தார். இலங்கை விதிவிலக்கான அறிவுசார் மூலதனம், முதன்மையான பல்கலைக்கழகங்கள் மற்றும் மிகவும் திறமையான தொழில்நுட்பத் துறையைக் கொண்டிருந்த போதிலும், அரசாங்கம், கல்வியாளர்கள் மற்றும் தனியார் துறை ஆகியவற்றின் முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு மத்திய தேசிய அமைப்பைக் வரலாற்று ரீதியாக கொண்டிருக்கவில்லை என்றும், முன்மொழியப்பட்டுள்ள தேசிய செயற்கை நுண்ணறிவு நிறுவனம் (National Artificial Intelligence Institute) இந்த முக்கிய இடைவெளியை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

முன்மொழியப்பட்டுள்ள இந்த நிறுவனம், தற்போது நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த முயற்சிகளை ஒருங்கிணைக்க உதவுவதுடன், ஆராய்ச்சியாளர்களுக்கு உயர் செயல்திறன் கணினி (HPC) உள்கட்டமைப்பு மற்றும் உயர்தர உள்ளூர்மயமாக்கப்பட்ட தரவுத்தொகுப்புகளை (datasets) பகிர்ந்துகொள்வதற்கான அணுகலையும் வழங்கும். மேலும், இலங்கையின் தனித்துவமான சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இறையாண்மைமிக்க செயற்கை நுண்ணறிவுத் திறன்களை (sovereign AI capabilities) வளர்ப்பதே இந்த நிறுவனத்தின் முதன்மை நோக்கமாக இருக்கும் என்றும், இது பொது நிர்வாகம், விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒரு விரிவான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

தனது உரையை நிறைவு செய்த பிரதி அமைச்சர், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிறுவனத்தின் வெற்றியானது ஒரு தனி அமைச்சினால் மாத்திரம் சாதிக்கப்படக்கூடியதொன்றல்ல எனத் தெரிவித்ததுடன், இதனைச் செயல்படுத்துவதற்கு அனைத்து பங்குதாரர்களுக்கிடையிலான நிறுவன ரீதியான ஒத்துழைப்பும், ஒருமித்த கருத்தும் முற்றிலும் அவசியமான முன்நிபந்தனைகளாகும் என்பதையும் கோடிட்டுக் காட்டினார்.

image 01image 02image 03image 05image 04image 06