Skip to main content

சிங்கள மற்றும் இந்து புத்தாண்டைத் தொடர்ந்து, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு இந்த ஆண்டிற்கான தனது பணிகளை உத்தியோகபூர்வமாக மீண்டும் ஆரம்பித்துள்ளது.

MoT Editor

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கௌரவ பிரதி அமைச்சர், பொறியியலாளர் எரங்க வீரரத்ன அவர்களின் தலைமையில் இன்று காலை இந்த நிகழ்வு நடைபெற்றது. ஆசீர்வாதம், ஒற்றுமை மற்றும் புத்தாண்டின் நேர்மறையான ஆரம்பத்தை அடையாளப்படுத்தும் வகையில் பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கேற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது அங்கு உரையாற்றிய அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப, தொலைதூர வேலை வாய்ப்புகளுக்கு (Remote working) ஆதரவளிக்க டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு அமைச்சு முன்னுரிமை அளிக்கும் என்று குறிப்பிட்டார். அத்துடன், இந்த ஆண்டு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை வினைத்திறனாகப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால மற்றும் இணைந்த நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அமைச்சின் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

image 01image 02image 03image 04image 05