கடந்த ஆட்சிக் காலங்களில் சுமார் 70 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு பாதியில் கைவிடப்பட்டிருந்த கல்வி கூட்டுறவுச் சங்கத்தின் (EDCS) டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை மீண்டும் தீவிரமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ எரங்க வீரரத்ன மற்றும் தொழில் பிரதி அமைச்சர் கௌரவ மஹிந்த ஜயசிங்க ஆகியோரின் தலைமையில் டிஜிட்டல் அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. அங்கு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் 'GovTech' நிபுணர்களின் உதவியுடன் இந்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இந்த டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் மூலம் EDCS இன் 229,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு மிகவும் விரைவான, வெளிப்படைத்தன்மை கொண்ட மற்றும் திறமையான சேவையை வழங்குவதே தற்போதைய நிர்வாகத்தின் பிரதான நோக்கமாகும்





